×

வெறித்தனமான லுக்கில் விஜய்.. மாஸான டைட்டில் டீசர் வெளியீடு !

 

விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 67’ படத்தின் வெறித்தனமான டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா சினிமாவையே எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ள திரைப்படம் ‘தளபதி 67’. விஜய் நடிப்பில் உருவாகும் இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் உருவாகும் இப்படத்தை லலித்குமார் தயாரித்து வருகிறார். இப்படத்திற்காக தாறுமாறாக இசையமைத்து வருகிறார் அனிரூத். 

இந்த படத்தில் திரிஷா, சஞ்சத் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய், திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்று நடித்து வருகின்றனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அது குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ‘லியோ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதோடு இப்படத்தின் டைட்டில் டீசர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. வித்தியாசமான உருவாகியுள்ள இந்த டீசரில் விஜய் மிரட்டலாக உள்ளார். இந்த டீசர் படத்திற்கான பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

<a href=https://youtube.com/embed/qN3wfuPYTI4?autoplay=1&mute=1&start=163><img src=https://img.youtube.com/vi/qN3wfuPYTI4/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">