×

விஜய்யின் ‘துப்பாக்கி’ வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு... கொண்டாடும் ரசிகர்கள் ! 

 

 விஜய்யின் ‘துப்பாக்கி’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவுபெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

தளபதி விஜய்யின் திரைப்படங்கள் எப்போதும் மிகப்பெரிய வரவேற்பை பெறும். ஆனால் அதையெல்லாம் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய தீனிப்போடும் படமாக வெளியான திரைப்படம் ‘துப்பாக்கி’. முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். 

கடந்த 2012-ஆம் வெளியான இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால், சத்யன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்த இந்த படத்திற்கு மிரட்டலான இசையை ஹாரிஸ் ஜெயராஜ் அமைத்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக நீண்ட நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதோடு துப்பாக்கி படத்தின் ரீமிக்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த படத்தில் முக்கிய வசனமான ‘ஐ எம் வெயிட்டிங்’ போன்ற வசனங்கள் இன்றைக்கு பேசப்பட்டு வருகிறது.