×

‘ரஞ்சிதமே’ பாடலுக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு... ஒரே நாளில் இப்படியொரு சாதனையா ?...  

 

 விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் ஒரே நாளில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. 

 தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை தில் ராஜூவின் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இந்த படம் விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படம் போன்று இல்லாமல் குடும்ப சென்டிமெண்ட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். 

இந்நிலையில் இப்படத்தில் விஜய் பாடிய ‘ரஞ்சிதமே’ பாடல் நேற்று வெளியானது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூப்பில் வெளியான இப்பாலை ஒரே நாளில் 15 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.