×

மீண்டும் லீக்கான ‘வாரிசு’ படப்பிடிப்பு வீடியோ... கடுங்கோபத்தில் நடிகர் விஜய் !

 

‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு வீடியோ அடுத்தடுத்து வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தற்போது ‘வாரிசு’ படத்தின் மூலம் தெலுங்கிலும் கால்தடம் பதித்துள்ளார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படம் போன்று இல்லாமல் குடும்ப சென்டிமெண்ட்டில் உருவாகி வருகிறது.  இப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

வரும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு வீடியோ ஒன்று லீக்காகியுள்ளது. அந்த வீடியோவில் விஜய் மாஸாக நடந்து வரும் காட்சிகள் உள்ளது. அதோடு சுரங்கம் ஒன்றில் ஹெலிகாப்டர் ஒன்று இருக்கும் காட்சிகளும் உள்ளது. இந்த வீடியோ வெளியானது விஜய் மற்றும் படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.