×

அஜித்தின் சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் விஜய்... ‘தளபதி 68’ படத்தின் இயக்குனர் இவரா ?

 

நடிகர் விஜய்யின் ‘தளபதி 68’ படத்தின் இயக்குனர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

டாப் ஹீரோவான நடிகர் விஜய் தற்போது ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். அதிரடி த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படம்  ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். 

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. ‘லியோ’ படத்திற்கு முன்னரே தெலுங்கு இயக்குனர் வம்ஷி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் விஜய் நடித்திருந்தார். குடும்ப பின்னணியில் உருவான இப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை. சீரியல் போன்று படம் இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். 

இதையடுத்து பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தை இயக்கிய கோபிசந்த் மலினேனி இயக்குவதாக தகவல் வெளியானது. ‘வாரிசு’ படம் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் விஜய் நடிக்கிறாரா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அஜித்தின் மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஆர்பி செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளன. விஜய்யுடன் வெங்கட் பிரபு கூட்டணி அமைப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.