×

விஜயகாந்த் மகனுக்கு எப்போது திருமணம் தெரியுமா ? 

 

சினிமாவில் நுழைந்து தனது ஸ்டைல், நடிப்பு மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகர் விஜயகாந்த். இவருடைய தைரியமான செயல் மற்றும் பேச்சால் மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார்.

இவர் சினிமாவில் நுழைந்து கமல், ரஜினி ஆகியோர் பீக்கில் இருக்கும்போது தனி ஆளாக நின்று தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.இதற்கிடையே விஜய்காந்தின் மூத்த மகனான விஜய் பிரபாகரனுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் நடப்பதற்கு முன்பு விஜய் காந்த் உடல்நிலை சரி இல்லாமல் போனதால் திருமணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். அதை தொடர்ந்து, தற்போது விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் முடிந்த பிறகு பிரபாகரனின் திருமணம் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.