×

#Breaking: கேப்டன் ‘விஜயகாந்த்’ காலமானார்.

 

கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஒரு கலக்கு கலக்கிய விஜயகாந்த், அரசியல் வாழ்விலும் பலரது ஹீரோவாகவே வலம் வந்தார். தேமுதிக எனும் கட்சியை துவங்கி எம்.எல்.ஏவாகவும், எதிர்கட்சி தலைவராகவும் திறம்பட செயல்பட்டார். கோடான கோடி ரசிகர்களையும், தொண்டர்களையும்  சேர்த்து தனக்கான ஒரு சாம்ராஜியத்தையே உருவாக்கி அனைவரையும் மிரளவைத்தார் விஜயகாந்த்.

தொடர்ந்து வெற்றிகொடி நாட்டிய அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் வாழ்விலிருந்து விலகினார். இருந்தும் அறிக்கை வாயிலாக அரசியல் செய்தார். இந்த நிலையில் சமீபகாலமாக உடல்நிலை மிகவும் மோசமாகவே தொடர் சிகிச்சையில் இருந்து வந்த விஜயகாந்த் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  இன்று காலமானார். அவரது இறப்பு செய்தி பலரையும் அதிரவித்துள்ளது. தொடர்ந்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் இரங்கள் பதிவிட்டு வருகின்றனர்.