×

விஜய்யின் 'பீஸ்ட்' வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவு.. சிறப்பு வீடியோ வெளியிட்ட படக்குழு..!
 

 

நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், விஜய் சண்டை பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை படக்குழுவினர்  வெளியிட்டுள்ளனர். 

விஜய் - இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.மேலும் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ரசிகர்களிடையே  கலவையான விமர்சங்களை பெற்றது.