×

விஜய் பட தயாரிப்பாளர்களுக்கு அடுத்தடுத்து செக்..... டிவிட்டர் கணக்குகள் தொடர்ந்து முடக்கம்

 

நடிகர் விஜய்யுடன் தொடர்புடையவர்களின் சமூக வலைதளங்கள் அடுத்தடுத்து முடக்கப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லியோ படத்தை தயாரிக்கும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் instagram பக்கம் சிறிது நேரம் முடக்கப்பட்டது. இது பெரிதளவில் பேசப்பட்டு வந்த நிலையில், தளபதி விஜய்யின் மேனேஜர் மற்றும் லியோ படத்தின் இணை தயாரிப்பாளர்  ஜெகதீஷ் அவர்களின் டிவிட்டர் பக்கம் மற்றும் கல்பாத்தி அகோரம் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான அர்ச்சனா கல்பாத்தியின் டிவிட்டர் பக்கமும் தற்காலிகமாக முடக்கப்பட்டது. 

விஜய்க்கு தொடர்புடைய நபர்களின் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப்பக்கங்கள் அடுத்தடுத்து முடக்கப்பட்டதால், கோலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.