×

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் பட அறிவிப்பு 

 

விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இயக்குநராக அவர் அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.   
இப்படத்தை லைகா தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இதில் கதாநாயகனாக கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில் கிரிக்கெட் கதைகளத்தில் இந்தப் படம் உருவாகுவதாக தகவல் வெளியானது.