×

ரூ.500 கோடி வசூலை நெருங்கும் விஜய்யின் 'தி கோட்'..

 
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.திரைப்படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. திரைப்படம் வெற்றிகரமாக இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோட் படம் வெளியாகி 13 நாட்களில் 413 கோடி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் ஈட்டியுள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படம் ரூ.1000 கோடி வரை வசூலிக்கும் என்று படக்குழு நம்பிக்கை  தெரிவித்திருந்தது. null