×

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் தங்கலான்.. ரசிகர்களுடன் படம் பார்த்த விக்ரம், பா.ரஞ்சித்! 
 

 

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இப்படம் இன்று சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. சுதந்திரத்திற்கு முன்னதாக கோலார் தங்கச் சுரங்கத்தில் மக்கள் சந்தித்த பிரச்னைகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும், தங்கலான் படத்தின் பாடல்கள் மினுக்கி, தங்கலானே ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 15) தங்கலான் வெளியாகி முதல் காட்சி முடிவடைந்துள்ள நிலையில், படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வெளியான வண்ணம் உள்ளது.


ரசிகர்கள் பலர் தங்கலான் படத்தின் இடைவேளை காட்சியும், கிளைமாக்ஸ் காட்சியும் மிகவும் நன்றாக உள்ளதாக பதிவிட்டு வருகின்றனர். மேலும், நடிகர் விக்ரம் என்னும் நடிப்பு அரக்கன் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொண்டுள்ளார் எனவும் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல், நடிகை மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரது நடிப்பையும் பாராட்டி வருகின்றனர்.இந்நிலையில், விக்ரம், பா.ரஞ்சித், கலையரசன், முத்துக்குமார் ஆகியோர் சென்னை சத்யம் திரையரங்கில் தங்கலான் படத்தை ரசிகர்களுடன் கண்டுகளித்தனர். தங்கலான் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இது விக்ரமின் கம்பேக் படம் எனவும், தங்கலான் வசூல் சாதனை படைக்கும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.