×

ரிலீசுக்கு தயாரான விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’.. புதிய அப்டேட் 

 

 விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ குறித்த புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. 

சியான் விக்ரம் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. நடிகர் விக்ரம் உளவு அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நிகரான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தை இயக்கியுள்ளார். 

இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, முன்னா சைமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதால் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

 சில பிரச்சினைகளால் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. அதன்படி இப்படத்தை ஜூலை 14-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதனால் அடுத்த மாதம் இப்படத்தின் டிரெய்லரை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.   ‌