என்னை ரோலக்ஸாக மாற்றியது யார் ?... சூர்யா வெளியிட்ட புதிய தகவல் !
‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் எப்படி வந்தது குறித்து சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘விக்ரம்’. மாபெரும் வெற்றிப்படமாக மாறியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான இப்படம் மரண மாஸ் ஹிட்டடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக சில நிமிடங்கள் மட்டுமே வரும் இந்த கதாபாத்திரத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்தது. அதோடு ரோலக்ஸ் கதாபாத்திரமாக மாற்றிய ஒப்பனை கலைஞருக்கும் பாராட்டு குவிந்தது. இந்நிலையில் ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்த சில தகவல்களை சூர்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அனைவரும் பாராட்டப்படும் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு மேக்கப் போட்டது ஷெரினா டிக்சிரியா தான் என்றும், அவருக்கு எனது மனமார்ந்த நன்றி என்றும் கூறியுள்ளார். அதோடு ஷெரினாவுடன் சூர்யா எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றையும் சூர்யா வெளியிட்டுள்ளார்.