×

விக்ரம் பிரபு - விதார்த் இணைந்து நடித்துள்ள ‘இறுகப்பற்று’.. ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு !

 

 விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் ‘இறுகப்பற்று’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

‘எலி’, ‘தெனாலிராமன்’ உள்ளிட்ட மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறுகப்பற்று’. இந்த படத்தில் விக்ரம் மற்றும் விதார்த் ஆகிய இருவரும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். 

இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். ‘மாயா’, ‘மாநகரம்’, ‘டாணாக்காரன்’ போன்ற ரசிகர்களின் கவனம் ஈர்த்த பொடன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. 

தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. காதல் மற்றும் ரொமென்ட்டிக் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.