×

சைலண்டாக நடைபெற்ற படப்பிடிப்பு... விரைவில் பறக்க தொடங்கும் 'துருவ நட்சத்திரம்'

 

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் மேனன் மற்றும்  விக்ரம் கூட்டணியில் தொடங்கப்பட்ட திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, முன்னா சைமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் விக்ரம் உளவு அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நிகரான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருந்தது. சில பிரச்சினைகளால் நீண்ட நாட்களாக இப்படம் வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

இந்நிலையில் நீண்ட நாட்களாக இப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாத நிலையில் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் விடுப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. தற்போது இந்த படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதால் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் விரைவில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.  ‌