×

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘வீர தீர சூரன்’…ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 

நடிகர் விக்ரமின் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் தனது 62வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விக்ரமின் 62வது திரைப்படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரியா ஷிபு இந்த படத்தை தயாரிக்கிறார்.


இப்படத்தில் விக்ரம் உடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்.17ம் தேதி அவரது 62வது திரைப்படத்திற்கு ‘வீர தீர சூரன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளது.இரு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் வேகமாக நடைபெற்று வருகிறது. தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 20ம் தேதி விடுதலை – 2 மற்றும் கேம் சேஞ்சர் திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.