×

விக்ரம் நடித்த  ‘வீர தீர சூரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு 

 

விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படம் மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘வீர தீர சூரன்’. இதன் டீசருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால், இதன் வெளியீட்டு தேதி முடிவாகாமல் இருந்தது. ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்தனர். <a href=https://youtube.com/embed/uxVyf47UllA?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/uxVyf47UllA/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">


அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால், ‘வீர தீர சூரன்’ படத்தை வெளியிடுவதற்கான சரியான தருணத்துக்கு படக்குழு காத்திருந்தது. ‘வீர தீர சூரன்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையினை ஃபைவ் ஸ்டார் செந்தில் கைப்பற்றி இருக்கிறார்.