×

 விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் படத்தின் டீசர்  

 

சு அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தங்கலான் படத்திற்கு பின் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீர தீர சூரன். 'சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் 2-ம் பாகத்தை முதலில் வெளியிட உள்ளனர்.  இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.