×


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் விமல் சுவாமி தரிசனம்
 

 

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்களும் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழ் படங்களில் களவாணி, தேசிங்கு ராஜா, மன்னர் வகையரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வாகைசூடவா, கலகலப்பு உள்பட பல்வேறு தமிழ் படங்களில் நடித்தவர் நடிகர் விமல். இவர் தற்போது சார், போகுமிடம் வெகு தூரமில்லை என்ற படங்களில் நடித்து அந்த படங்கள் வெளியாகும் நிலையில் உள்ளது. 
இந்த நிலையில் தான் நடித்த படங்கள் வெற்றி பெற வேண்டி இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவர் திருச்செந்தூர் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினர்.கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த அவரை பார்த்த பக்தர்கள் அவருடன் நின்று புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
அதைத் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் குறித்த கேட்டதற்கு சார், போகுமிடம் வெகு தூரமில்லை படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளதாக கூறிய அவர் சார் திரைப்படம் வித்யாசமான கதைக்களத்தில் அமைந்துள்ளதாகவும் கூறினார். மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது தேசிங்கு ராஜா. இந்த படத்தைத் தொடர்ந்து தேசிங்கு ராஜா 2 திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறினார். தேசிங்கு ராஜா 2 திரைப்படம் பொழுதுபோக்கான கதை அம்சத்தில் இருக்கும் என்றும், இந்த திரைப்படம் பொதுமக்களுக்கு பிடிக்கும் என்று கூறி அங்கிருந்து கிளம்பினார்.