×

கொடூர பார்வையில் மிரட்டும் விமல்.. ‘வெற்றி கொண்டான்’ செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

 

விமல் நடிப்பில் உருவாகி வரும் ‘வெற்றி கொண்டான்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக ஒரு காலத்தில் வலம் வந்த நடிகர் விமல், தற்போது அடுத்தடுத்து சறுக்கலை சந்தித்து வருகிறார். அதனால் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.  அந்த வகையில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள எங்க பாட்டன் சொத்து, சண்டக்காரி, கன்னி ராசி ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.  இதனைத்தொடர்ந்து  படவா, மஞ்சள் குடை, லக்கி, ப்ரோக்கர் உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து விமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வெற்றிக் கொண்டான்’. வேலு தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும்  இப்படத்தில் கதாநாயகியாக நரங் மிசா என்பவர் நடித்து வருகிறார். இவர்களுடன் காமெடி நடிகர் சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ராமி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் இப்படத்தில் கிஷோர் படத்தொகுப்பாளராக உள்ளார்.

ஒடியன் டாக்கீஸ் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கொடூர பார்வையில் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.