×

‘விரூபாக்ஷா’ திரைப்படத்தின் அசத்தல் டீசர் வெளியீடு.

 

"விருபாக்ஷா" திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

 ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பேனர்களின் கீழ் பிவிஎஸ்என் பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் தண்டு இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம்விருபாக்ஷா”. இப்படத்தில் சாய் தரம் தேஜ் மற்றும் சம்யுக்தா மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு சுகுமார் திரைக்கதை அமைத்துள்ளார். திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ள விருபாக்ஷா திரைப்படத்திற்கு பி. அஜனீஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

 தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக பட உருவாகியுள்ளது.’ சரித்திரத்தில் இது  போன்று நிகழ்வுகள் ஏற்படுவது இதுவே முதல் முறை என இந்த டீசர் தொடங்குகிறது. காண்பவர்களின் ரத்தத்தை  உறையவைக்கும்  இந்த டீசர் வெளியாகியுள்ளதுஇந்த திரைப்படத்திற்கு ஷாம்தத் சைனுதீன் ஒளிப்பதிவு செய்ய, நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

<a href=https://youtube.com/embed/MwnohRkq5Hw?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/MwnohRkq5Hw/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Virupaksha Teaser - Tamil | Sai Dharam Tej | Samyuktha | Sukumar B | Karthik Dandu" width="640">