×

விஷால் நடிக்கும் புதிய படம் -இயக்குனர் யார் தெரியுமா ?

 

நடிகர் விஷால் சினிமா உலகில் 2001ம் ஆண்டு நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக அறிமுகம் ஆனார் .பின்னர் இவர் செல்லமே என்ற படத்தின் மூலம் நடிகர் ஆனார் .அதை தொடர்ந்து சண்டக்கோழி ,திமிரு ,தாமிரபரணி ,சிவப்பதிகாரம் ,மலைக்கோட்டை ,அவன் இவன் போன்ற வெற்றி படங்களில் நடித்தார் 
அதனால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆனார் விஷால். இவரின் திருமணம் கூட அவரின் 48வது வயதில் விரைவில் நடைபெற உள்ளது .இவரது நடிப்பில் சமீபத்தில் மதகஜராஜா படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் .இது விஷாலின் 35வது படமாகும் .
இந்த படத்தினை 'ஈட்டி' பட இயக்குநர் ரவி அரசு இயக்க உள்ளார். இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ஆர்பி சவுத்ரி சார்பில் சூப்பர் குட்பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்க உள்ளது.சமீபத்தில் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்றது. அதில் நடிகர்கள் சித்தார்த் மற்றும் கார்த்தி கலந்து கொண்டனர். இந்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிககள் சென்னையில் 45 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் விஷால், துஷாரா விஜயன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு  சென்னை பூந்தமல்லியில் தொடங்கி  உள்ளது.