விஜய் ஆண்டனி கச்சேரியில் வைப் செய்த விஷால்... அன்புக்கும் ஆதரவிற்கும் மீண்டும் நன்றி என நெகிழ்ச்சி பதிவு
நடிகர் விஷால் இசைக்கச்சேரியில் நடனமாடும் வீடியோ வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘மதகஜராஜா’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இதில் விஷால் ‘மை டியர் லவ்வரு’ பாடலை பாடியுள்ளார். இந்நிலையில், சென்னை நந்தனத்தில் நேற்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் 3.0 இசை கச்சேரி நடைபெற்றது. இதில் விஷால் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் நடனமாடியபடி, உற்சாகமாக காணப்பட்ட விஷால், ‘மை டியர் லவ்வரு’ பாடலை பாடினார் . இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விஷால் ஒரு பதிவிட்டுள்ளார்.