நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் இயக்குனரானார் -எந்த படம் தெரியுமா ?
Aug 18, 2026, 06:00 IST
நடிகரும், தயாரிப்பாளருமான விஷால், திடீரென்று ‘மகுடம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். முதலில் இப்படத்தை ரவி அரசு எழுதி இயக்கி வந்தார். ஆனால், படப்பிடிப்பில் கதை சம்பந்தமாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில், தொடர்ச்சியான மோதலை தவிர்க்க, படத்தில் இருந்து அவராகவே வெளியேறி விட்டார். ஆனால், அவருக்கான சம்பளம் வழங்கப்பட்டதாக விஷால் தெரிவித்தார். இதையடுத்து இப்படத்தை விஷால் எழுதி இயக்கி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் துஷாரா விஜயன், அஞ்சலி, யோகி பாபு நடித்துள்ளனர். ஆக்ஷன், எமோஷன் கலந்த விறுவிறுப்பான படமான இதை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.