×

திரையரங்க உரிமையாளர்களுக்கு  நடிகர் விஷால் என்ன கோரிக்கை வைத்தார் தெரியுமா? 

 

விக்னேஷ் நடித்துள்ள ரெட் பிளவர் பட பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும் நடிகர் சங்க பொதுச்செயலாளரும விஷால் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் விஷால் பேசியதாவது:
திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒரு கோரிக்கை. படங்களுக்கு விமர்சனம் என்பது வேண்டும். இனி வருங்காலங்களில் ஒரு படம் வெளியாகும்போது முதல் 12 காட்சிகள், அதாவது முதல் 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் பப்ளிக் ரிவியூ என்ற பெயரில் பேட்டி எடுக்க யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளரளுக்கு வேண்டுகோள் வைக்கிறேன் 
ஒரு திரைப்படம் வெளியாகும்போது முதல் 3 நாட்களுக்கு மட்டும் திரையரங்க உரிமையாளர்கள் பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம். வெளியில் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு முக்கியமான கோரிக்கை. தமிழ் சினிமாவில் ஒரே நாளில் 10 படங்கள் வெளியாகிறது, எந்த படத்துக்கும் சரியான அளவில் தியேட்டர் கிடைப்பதில்லை. அதனால் ரிலீஸை ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும்.
விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க வேலைகள் நடந்து வருகின்றது. ஆகஸ்ட் 29 என் பிறந்த நாள்.  கண்டிப்பாக நல்ல செய்தி காத்திருக்கிறது. திருமண தேதியை விரைவில் அறிவிப்பேன்.