×

மிரட்டலான கெட்டப்பில் விஷால்.. ‘மார்க் ஆண்டனி’ ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

 

 விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி மிரட்டலான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஷால் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படம் ஒரு ப்ரீயட் படமாக உருவாகி வருகிறது. அதாவது 1970-களில் நடப்பது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் வெறித்தனமான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விஷாலுடன் எஸ்ஜே சூர்யா மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் மிரட்டலான லுக்கில் இருக்கின்றனர். குடியரசு தினத்தையொட்டி இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.