×

மாஸ் பண்ணும் டி.ஆர்.. டாப் டக்கராக தயாராகும் ‘மார்க் ஆண்டனி’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் !

 

விஷால் நடிப்பில் உருவாகும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

முதல் முறையாக டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது ‘மார்க் ஆண்டனி’. ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன், ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ப்ரீயட் படமாக உருவாகியுள்ள இந்த படம் இரண்டு காலக்கட்டங்களில் உருவாகியுள்ளது. அதாவது 1970-களில் நடப்பது போன்றும், 1990-களில் நடப்பது போன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

 இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் டி.ராஜேந்தர் கர்ஜிக்கும் குரலில் உருவாகி வருகிறது. அதிருது மனமே என தொடங்கும் அந்த பாடலின் மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.