×

விஷாலுக்கு வில்லனாகும் தெலுங்கு நடிகர்... 'மார்க் ஆண்டனி' முக்கிய அப்டேட்

 

விஷாலின் 'மார்க் ஆண்டனி' படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'லத்தி' படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷால் மற்றும் எஸ்.சூர்யா என இருவருமே இரட்டை வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு காலக்கட்டத்தில் உருவாகிறது. அதாவது 1970-களில் நடப்பது போன்றும், தற்போதைய கதைக்களத்திலும் உருவாகிறது. அதனால் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 

ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் 'புஷ்பா' படத்தில் வில்லனாக மிரட்டிய தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர்' நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.