×

ஜஸ்டு மிஸ்ஸில் உயிர் தப்பினோம்... ‘மார்க் ஆண்டனி’ ஷூட்டிங்கில் விபத்து.. பதறிய விஷால் !

 

‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் நூலிழையில் உயிர் தப்பியதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.  மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படம் ஒரு ப்ரீயட் படமாக உருவாகி வருகிறது. அதாவது 1970-களில் நடப்பது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கதாநாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். இவர்களுடன் ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அப்போது மிரட்டலான ஆக்ஷன் காட்சி ஒன்று பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு வந்தது. இந்த படப்பிடிப்பு ஏராளமான துணை நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வந்தனர். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக லாரி ஒன்று படப்பிடிப்பு தளத்திற்கு புகுந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத படக்குழுவினர் பதறி அடித்துக் கொண்டு ஓடினர். இது படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் வீடியோவை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.