×

"ஐ லவ் யூடி"..‌  'மார்க் ஆண்டனி' செகண்ட் சிங்கிள் அப்டேட் !

 

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'மார்க் ஆண்டனி' இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படம் ஒரு ப்ரீயட் படமாக உருவாகி வருகிறது. அதாவது 1970-களில் நடப்பது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. திரிஷா இல்லன்னா நயன்தாரா, பஹிரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். 

மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன், ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.‌ வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளியாகும் என  இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின்  I Love u di என்ற பாடல் வரும் ஆக்ஸ்ட் 23-ஆம் தேதி வெளியாகிறது.