"இந்தப் படத்தை இனி தொடர வேண்டாம்" -விஷ்ணு விஷால் கூறும் படம் எது தெரியுமா ?
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென இப்படம் கைவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விஷ்ணு விஷால் மீது அருண்ராஜா காமராஜ், இயக்குனர்கள் சங்கத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து விஷ்ணு விஷால் வெளியிட்ட அறிக்கை:
சமீபத்தில் இந்தப் படத்தின் இயக்குநருடனான கிரியேட்டிவ் கருத்து வேறுபாடுகள் மற்றும் பட்ஜெட் தொடர்பான சிக்கல்கள் ஆகியவை ஏற்பட்டது. உண்மையில், தற்போது திரைத்துறை எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய சவால்களில் பட்ஜெட் பிரச்னையும் ஒன்று என்பதை திரைத்துறையினர் அனைவரும் அறிவர். இந்தப் படத்தை சாத்தியமாக்க என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தும், இந்தப் படத்தை இனி தொடர வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது எனக்கும் அருண்ராஜா காமராஜுக்கும் எளிதான முடிவு அல்ல என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இருந்தாலும், இந்தப் படத்திலிருந்து நாங்கள் இருவரும் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.