விஷ்ணு விஷால் நடிப்பில் 'கட்டா குஸ்தி'... படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியீடு !

 
katta kusthi

 விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'கட்டா குஸ்தி' படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

katta kusthi

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கட்டா குஸ்தி’.தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா இணைந்து தயாரித்து வருகின்றனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மல்யுத்தத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் குஸ்தி வீரராக விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பு பெற்றுள்ளது.