×

விஷ்ணு விஷால்-ராம்குமார் கூட்டணியில்  ராட்சசன்-2

 

ராட்சசன் திரைப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், ராட்சசன்-2 திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த 2014-ம் ஆண்டு  ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் முண்டாசுப்பட்டி திரைப்படம் வெளியானது. முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து உருவாக்கப்பட்ட இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, 2018-ல் மீண்டும் ஒன்றிணைந்து  ராட்சசன் திரைப்படத்தை உருவாக்கி வெளியிட்டனர். த்ரில்லர் கதைக்களத்தில் அமைந்த ராட்சசன் திரைப்படம் பிரமாண்ட வெற்றியடைந்தது. தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. 

ராட்சசன் வெற்றியை தொடர்ந்து ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த கூட்டணியில் புதிய படம் உருவாகும் என எதிர்பார்த்த நிலையில், சில பிரச்சனைகளால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் விஷ்ணு விஷால்-ராம் குமார் கூட்டணி மீண்டும் இணைந்து ஒரு புதிய படத்தை உருவாக்கி வருகின்றனர். விஷ்ணு விஷாலின் 21-வது படமாக உருவாக உள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

விரும்பன், மாவீரன் படங்களில் நடித்த நடிகை அதிதி சங்கர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும், முனீஸ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இன்றுடன் ராட்சசன் வெளியாகிய ஐந்து ஆண்டுகளை நிறைவு பெற்றுள்ளது. இதனை படக்குழுவினர் உள்பட ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.