×

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடங்கிய விஷ்ணு விஷாலின் ஆர்யன்
 

 

விஷ்ணு விஷால் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இது தவிர்த்து கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் ஆர்யன் என்ற படத்தில் கமிட் ஆனார். ஒரு சில காரணத்தினால் படப்பிடிப்பு பாதியில் நிற்கப்பட்டது. தற்பொழுது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இன்று படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஷ்ணு அதை பதிவிட்டு அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார்.

null


இப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீனாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இது ஒரு போலிஸ் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் அமைக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படத்திற்கு சாம். சி எஸ் இசையமைக்கவுள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழியில் வெளியாகவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.