உச்சக்கட்ட கிளாமரில் விஜே மகேஸ்வரி.. வைரல் புகைப்படங்கள் !
விஜே மகேஸ்வரி அசத்தலான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் மகேஸ்வரி.. அதன் பின்னர் சன் மியூசிக், இசையருவி என பல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த அவர், திருமணம் ஆனதால் குழந்தை, குடும்பம் என பிரேக் எடுத்துக்கொண்டார்.. கொஞ்சம் இடைவெளிக்கும் பிறகு மீண்டும் கெரியரைத் தொடங்கிய அவர், தாயுமானவன் புதுக்கவிதை போன்ற ஒரு சில சீரியல்களில் நடித்தார். மேலும், குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் கூட நடித்திருக்கிறார் மகேஸ்வரி.
தற்போது ஜீ-தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக இருந்த மகேஸ்வரி, காமெடி கில்லாடிஸ், பேட்ட ராப் போன்ற பல நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கியுள்ளார். கடந்த 2018 வெளிவந்த பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் ரைசா வில்சனுடன் இணைந்து நடித்திருப்பார் மகேஸ்வரி.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் விஜே மகேஸ்வரி, தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கிளாமரில் அசத்தலாக இருக்கும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.