வெற்றிக்காக காத்திருக்கும் கீர்த்தி..!! ‘ரிவால்வர் ரீட்டா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘சரஸ்வதி சபதம்’பட இயக்குநர் ஜே.கே.சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ரிவால்வர் ரீட்டா’. தி ரூட் மற்றும் தி பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளன. ஷான் ரோல்டன் இசையில், சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி தாயாரிப்பில் உருவான இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவடைந்துவிட்டது. தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி படத்தின் பெயர் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘ரகு தாதா’ படம் வர்த்தக ரீதியாக வெற்றிக்காணவில்லை. அத்துடன் தனது நீண்ட கால நண்பர் ஆண்டனி தட்டிலை கடந்த டிசம்பர் 12ம் தேதி கீர்த்தி கரம் பிடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு தமிழில் வெளியாகவுள்ள முதல் படம் என்பதால் இந்தப்படத்தின் வெற்றிக்காக கீர்த்தி சுரேஷ் பெரும் எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கிறார்.