வயநாடு நிலச்சரிவு- நடிகர் மோகன்லால் ரூ.3 கோடி நிதியுதவி
Aug 3, 2024, 15:11 IST
டெரிடோரியல் ஆர்மியில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் நடிகர் மோகன்லால் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை கிராமத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். ராணுவ வீரர்களிடம் மீட்பு பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், "சவால்களை எதிர்கொண்டாலும், நாங்கள் எப்போதும் வலுவாக இருந்து வருகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் ஒற்றுமையாக இருந்து நமது பலத்த பலத்தை காட்டுவோம், ஜெய்ஹிந்த்" என்று கூறினார். நிலச்சரிவை நேரில் ஆய்வு செய்த பின்னர் நடிகர் மோகன்லால், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.3 கோடி ரூபாய் அளித்துள்ளார். ஏற்கனவே ஒரு சில தமிழ் நடிகர்கள் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.