திருமண வதந்திகள்... கொதித்தெழுந்த சாய்பல்லவி
Sep 22, 2023, 16:21 IST
சாய்பல்லவியின் வேலையின்றி தேவையில்லாமல் வதந்திகளை பரப்புவது ஒரு இழிவான செயல் என்று நடிகை சாய்பல்லவி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்
கடந்த 2015-ம் ஆண்டில் வெளியான 'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சாய்பல்லவி. 2017-ம் ஆண்டு 'கரு' என்ற படத்தின் மூலம் தமிழில் இவர் அறிமுகமானார். 'மாரி 2', 'என்ஜிகே', 'கார்கி' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து, சாய் பல்லவி , இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் புதிய படத்தில் ஒப்பந்தமாகினார். இந்நிலையில், அத்திரைப்படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, திருமண புகைப்படம் போல சித்தரித்து சமூக வலைதளங்களில் சிலர் பகிர்ந்து வந்தனர்.