×

விருது விழாவில் ஐஸ்வர்யா ராய் மகள் செய்த காரியம்..

 

ஐஸ்வர்யா ராய் நேற்று நடந்த விருது விழா ஒன்றிற்கு மகளையும் அழைத்து வந்திருந்தார். விருது விழா நிகழ்ச்சியில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் ஒன்றாக தான் மேடைக்கு சென்று விருது வாங்கி இருந்தனர். முதல் வரிசையில் ஐஸ்வர்யா ராய், அவர் மகள், அதன் பின் விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.ஐஸ்வர்யா ராய் உடன் பேச நடிகர் சிவராஜ்குமார் வந்திருந்தார். அப்போது ஐஸ்வர்யா மகள் ஆராத்யா அவரது காலில் விழுந்து இருக்கிறார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. மகளை ஐஸ்வர்யா எப்படி வளர்த்து இருக்கிறார் என அனைவரும் ஆச்சர்யத்துடன் பேசி வருகின்றனர்.