×

சரவணா ஸ்டோர்ஸ் அருள் நடிக்கும் படம் எந்த நிலையில் உள்ளது!?

சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கு தெரிந்த செய்தி தான். அஜித்தின் உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி -ஜெர்ரி இந்தப் படத்தை இயக்குகின்றனர். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்திகா திவாரி தமிழில் அறிமுகமாகிறார். மேலும் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தற்காலிகமாக புரொடக்ஷன் நம்பர் 1 என்ற பெயரில் உருவாகிவரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு
 

சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கு தெரிந்த செய்தி தான். அஜித்தின் உல்லாசம்  படத்தை இயக்கிய ஜேடி -ஜெர்ரி  இந்தப் படத்தை இயக்குகின்றனர்.

இப்படத்தில் கதாநாயகியாக நடிகை  கீர்த்திகா திவாரி தமிழில் அறிமுகமாகிறார். மேலும் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்ட  பலர் நடிக்கின்றனர். தற்காலிகமாக புரொடக்‌ஷன் நம்பர் 1 என்ற பெயரில் உருவாகிவரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கப்பட்டது.

தற்போது அந்தப் படத்தின் ஒரு பாடல் மற்றும் இரண்டு சண்டைக் காட்சிகள் வரை இதுவரை படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு அனலரசு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக் காட்சிகளில் இறுதி வடிவத்தைப் பார்த்த அருள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது என்று உற்சாகமடைந்துள்ளாராம். அதையடுத்து அனலரசுவை வெகுவாகப் பாராட்டினாராம். இந்த உற்சாகத்தில் படத்தில் மற்றொமொரு சண்டைக்காட்சி வைக்குமாறும் கேட்டுள்ளாராம்.

இந்தப் படத்திற்கு கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.