×

அரசியல் பேசினால் என்ன தவறு - கீர்த்தி பாண்டியன் 

 

நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் அறிமுக இயக்குநர் ஹரீஷ் ராம் இயக்கத்தில் தர்ஷன், தீனா ஆகியோர் நடிப்பில் வெளியான  ‘தும்பா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  அதையடுத்து மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'ஹெலன்' படத்தின் தமிழ் ரீமேக் ஆன 'அன்பிற்கினியாள்' படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் கீர்த்தியின் நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்தன. தற்போது கீர்த்தி பாண்டியன் கண்ணகி என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த டிசம்பரில் வௌியாகி வரவேற்பை பெற்றது. படத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஆகியோர் நடித்தனர். 

தற்போது அசோக் செல்வன், சாந்தனு, மற்றும் கீர்த்தி நடித்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய கீர்த்தி பாண்டியன், அரசியல் பேசினால் என்ன தவறு உள்ளது. நாம் சாப்பிடும் உணவு, உடை என அனைத்திலுமே இன்று அரசியல் உள்ளது என கூறினார்.