×

சிவகார்த்திகேயனின் 'அமரன்' இசை வெளியீடு எப்போது? எங்கே? சூப்பர் அறிவிப்பு..!

 

சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளிவருகிறது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி மற்றும் விழா நடைபெறும் இடம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளதால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்த முகுந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ‘அமரன்’ உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த படம் ஏற்கனவே தீபாவளி வெளியீடாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு பகலாக படக்குழுவினர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. திட்டமிட்டபடி சரியாக ரிலீஸ் செய்யப்படுவதற்காக படக்குழு முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 18 ஆம் தேதி, அதாவது நாளை, சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.