×

 பிரதர் டிரைலர் எங்கடா? - படக்குழுவை சாடிய நெட்டிசன்கள்

 
எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் பிரதர். பிரியங்கா மோகன் பூமிகா, சரண்யா, பொன்வண்ணன், நட்டி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். அக்கா-தம்பி உறவை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்கு வர இருக்கிறது . இத்திரைப்படம் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இத்திரைப்படம் ஜெயம் ரவிக்கு வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையொட்டி படத்தின் புரமோஷன் பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து வந்த நிலையில் நேற்று துபாய் சொகுசு கப்பலில் இந்த படத்தின் விழா நடைபெற்றுள்ளது. விழாவில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் உள்பட பட குழுவினர் பங்கேற்றனர். திரைப்படம் வெளியாக இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில். திரைப்படத்தின் டிரைலர் இன்னும் வெளியாகாகது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் அவ்வளவாக நடக்கவில்லை. என்றும் உள்ளூர் ப்ரோமோஷனயே இங்க பண்ணல அதுக்குள்ள துபாய் ப்ரோமோஷனா?... துபாய்ல ப்ரோமோஷன் பண்ணா யாரு தமிழ்நாட்டுல வந்து படம் பாக்க வருவா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.