×

தீபாவளி வின்னர் யார்? பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் இதோ!

 

இந்த ஆண்டு தீபாவளி ட்ரீட்டாக வெளியான கார்த்தியின் ஜப்பான், விக்ரம் பிரபுவின் ரெய்டு, காளிவெங்கட்டின் கிடா  மற்றும் ராகவா லாரன்ஸ், எஸ். ஜே சூர்யா ஆகியோரின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களுள் எந்த படம் தீபாவளி  வின்னராக வந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கண்ட படங்கள் தீபாவளிக்கு வெளியானாலும் கடுமையான போட்டி ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா ஆகிய படங்களுக்கு தான் நடந்தது. அதில் ஜப்பான் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இரண்டு நாள்  முடிவில் படம் 4.15 கோடி வசூலித்த நிலையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு படம் மொத்தமாக மூன்று நாள் முடிவில் 11கோடி வசூலித்துள்ளது. அதேப்போல ஜிகர்தண்டா படம் முதல் இரண்டு நாட்களில் 4.5கோடி வசூலித்த நிலையில் தீபாவளிக்கு மொத்தமாக 14.52கோடி வசூலித்து தீபாவளி வின்னராகியுள்ளது.