கமல்ஹாசன் நடிக்கவுள்ள 'KH237’ படத்தின் இசையமைப்பாளர் யார்...?
May 6, 2025, 17:08 IST
கமல்ஹாசன் நடிக்கவுள்ள 'KH237’ படத்தின் இசையமைப்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' என்கிற படத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஜுன் 5ல் படம் வெளியாகிறது.இதையடுத்து விரைவில் சண்டை இயக்குனர்கள் அன்பறிவு இயக்கத்தில் கமல் அவரது 237வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். சில மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்போது இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மான் அல்லது அனிரூத்தை ஒப்பந்தம் செய்ய கமல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தக் லைப் படத்தை தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றாமல் அனிரூத்துடன் இணைவது குறித்து படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.