×

3 Idiots-ஐ விஜய் என்ன தான் முதலில் டைரக்ட் பண்ண சொன்னாரு - பார்த்திபன்..! 

 

3 இடியட்ஸ் படம் குறித்து நடிகர் பார்த்திபன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. 

"3 இடியட்ஸ் தமிழாக்கம் பண்ண வரும்போது முதல்ல என்னைத்தான் விஜய் டைரக்ட் பண்ண ரெகமண்ட் பண்ணார். ஜெமினி பிக்சர்ஸ்ல இருந்து வந்து `விஜய் சார் உங்களைதான் சொன்னார்'னு சொன்னாங்க. சம்பளம் உட்பட எல்லாமே பேசப்பட்டது. ஆனா, அப்ப நான் `ஒரு ரீமேக் படம் எதற்காக நான் டைரக்ட் பண்ணணும், விஜய்யோட ஒரு படம் பண்ன வாய்ப்புக்கிடைச்சதுன்னா ஃப்ரெஷ்ஷான ஒரு கதையாவே பண்ணலாமே'ன்னு நினைச்சேன். ஏன்னா, 3 இடியட்ஸை உலகமே பார்த்துட்டாங்க. ரீமேக் பத்தி எனக்கு குழப்பங்கள் இருந்தது. அவங்ககிட்ட நிறைய கேள்விகள் கேட்டேன். அதுக்கு அப்புறம் அது திசை மாறி நண்பனா மாறிச்சு. என்னுடைய நண்பர் ஷங்கர் இயக்கத்துல.

ஷங்கர் அந்தப் படத்தை அவ்ளோ கலர்ஃபுல்லா பண்ணியிருந்தார். போஸ்டர்ஸ்லாம் பார்த்தவுடனே சத்யமா நம்மளால் இவ்ளோ கலர்ஃபுல்லா பண்ணியிருக்க முடியாதுன்னு நினைச்சேன். நான் அந்த உணர்வுகளுக்குள்ள மட்டுமே போகணும்னு நினைச்சேன். எஸ்ஏசி சார் எப்பவுமே `நீங்களும் தம்பி விஜய்யும் சேர்ந்து ஒருபடம் பண்ணா ஒரு மேஜிக் நடக்கும். எப்படி பிரபுதேவாவும் விஜய்யும் சேர்ந்தா அது எப்படி போக்கிரித்தனமான ஒரு கமர்ஷியல் சினிமாவா மாறுச்சோ, அப்படி நீங்க சேர்ந்தா நல்லாயிருக்கும்'னு ஆர்வத்தோட இருக்கேன்னு சொல்லுவார்.அவரை வெச்சு `ஒத்த செருப்பு' மாதிரியான படங்கள் பண்ணக்கூடாதுன்னு எனக்கே தெரியும். 

250 கோடி சம்பளம் வேணாம் சொல்லி ஒருத்தர் அரசியல் பக்கம் போறாரேன்னு எப்படி பட்ட பெரிய மனசு வேணும். அவர் அரசியலுக்கு வருவாருனு முதலில் ட்வீட் போட்டது நான் தான். எம்ஜிஆர் இத தான் பண்ணாரு, கமல் இதை தான் ட்ரை பண்ணிட்டு இருக்காரு என பல விஷயங்களை இந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்    
 

<a href=https://youtube.com/embed/D-liJoIyiaM?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/D-liJoIyiaM/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">