×

விக்னேஷ் சிவனின் ‘LIC’ படத்தின் தலைப்பு மாற்றம் : நாளை வெளியாகும் 

 

விக்னேஷ் சிவனின் ‘LIC’ படத்தின் தலைப்பு மற்றும்  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வருகிற 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் LIC –  லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து எல்ஐசி என்ற பெயரை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்றும் எல்ஐசி – காப்பீட்டு நிறுவனம் தரப்பில் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வழக்கறிஞர் கார்த்திகை பாலன் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதேபோல பூஜை தொடங்கிய அடுத்த நாளே LIC என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்றும் இனியும் இச்செயலை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும் இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் படத்தின் தலைப்பை மாற்ற உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் வருகிற 25ம் தேதி 12.00AM -க்கு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவித்துள்ளது.