×

‘WWW’ படத்தின் லாக்டவுன் ராப் பாடல் வெளியீடு.. ரசிகர்கள் வரவேற்பு !..

‘WWW’ படத்தின் லாக்டவுன் ராப் வீடியோ பாடல் ஒன்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான “24 KISSES” படத்தில் நடித்து புகழ்பெற்ற ஆதித் அருண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘WWW’. அதாவது யார். எங்கே.. ஏன்… என்பதைதான் சுருக்கி வைத்திருக்கிறார். இந்த படத்தில் ஆதித் அருணுக்கு ஜோடியாக ஷிவானி ராஜசேகர் நடித்துள்ளார். திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி.குகன் இயக்கியுள்ளார். சைமன் கே.கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு
 

‘WWW’ படத்தின் லாக்டவுன் ராப் வீடியோ பாடல் ஒன்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான “24 KISSES” படத்தில் நடித்து புகழ்பெற்ற ஆதித் அருண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘WWW’. அதாவது யார். எங்கே.. ஏன்… என்பதைதான் சுருக்கி வைத்திருக்கிறார். இந்த படத்தில் ஆதித் அருணுக்கு ஜோடியாக ஷிவானி ராஜசேகர் நடித்துள்ளார். திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி.குகன் இயக்கியுள்ளார்.

சைமன் கே.கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ராப் வீடியோ பாடல் ஒன்றை படக்குழு வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தில் வெளியான இப்பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.