‘ராமாயணா’ பட புரொமோஷனில் யஷ் என்ன பேசினார் தெரியுமா ?
‘ராமாயணா’ படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் பட புரொமோஷனில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. அந்த வகையில் மும்பை, பெங்களூருவைத் தொடர்ந்து ஐதராபாத்தில் விழா நடந்தது. அதில் பேசிய யஷ், “நமது இந்திய இதிகாசத்தை உலக மேடையில் கொண்டு செல்வதற்காக தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தனது பணம், புகழ் அனைத்தையும் பந்தயம் கட்டி இறங்கியுள்ளார். தயவுசெய்து விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தில் சின்ன குறைகளை தேடாதீர்கள்.
இவரைப் போன்றவகள் நம்மிடம் இல்லாமல் போனால் மீண்டும் இது போன்ற முயற்சிகள் நடக்க நீண்ட ஆண்டுகள் ஆகலாம். அதனால் நாம் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடுவோம். அனைத்துத் திரைத்துறை ரசிகர்களுக்கும், எனது நலம் விரும்பிகளுக்கும் நான் வைக்கும் ஒரே கோரிக்கை இதுதான். இந்த ஒரு முறை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நமது இந்தியக் கதையின் பிரமாண்டத்தை உலகிற்கு நிரூபித்துக் காட்டுவோம்” என்றார்.